Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கோயில் திருவிழாவில் பங்கேற்றதால் கடும் விமர்சனம்: ஃபரியா அப்துல்லா வீடியோ வெளியிட்டு கதறல்

ஐதராபாத்: தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஃபரியா அப்துல்லா (29), தமிழில் விஜய் ஆண்டனியுடன் ‘வள்ளி மயில்’, சந்தீப் கிருஷ்ணாவுடன் ‘சிக்மா’ ஆகிய திரைப் படங்களில் நடித்துள்ளார். ஐதராபாத் பழைய நகரத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிகுந்த மகான் காளீஸ்வரி அம்மாவாரி கோயிலில், கடந்த 10ம் தேதி நடந்த போனால் திருவிழாவில் உற்சாகத்துடன் கலந்துகொண்டார். அப்போது, தனது சிறுவயது ஆசையான பாரம்பரிய ‘பங்காரூ போனத்தை’ தலையில் சுமந்து கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டார்.

அவர் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், இந்து கோயில் திருவிழாவில் பங்கேற்றதை சுட்டிக்காட்டிய ஒரு தரப்பு, ‘மத நம்பிக்கை இல்லாதவர்’ என்று குறிப்பிட்டு அவரை கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஃபரியா அப்துல்லா, அதில் கதறி அழுதபடி பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘என்மீது வெறுப்பை உமிழ்பவர்களுக்கும், என்னை மத நம்பிக்கை இல்லாதவர் என்று சொல்பவர்களுக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

மரம், கல், பட்டாம்பூச்சி உள்பட எல்லாவற்றிலும் இறைவனை பார்க்கிறேன். அனைவரிடமும் இறைத்தன்மையை பார்க்க தவறினால், வாழ்க் கையின் அற்புதத்தையே இழந்துவிடுவீர்கள். வெறுப்புக்கு எதிராக அன்பை பொழிவதே எனது புரட்சி. குழந்தையாக இருந்தபோது, ‘கடவுள்’ என்றால் என்னஎன்று அம்மாவிடம் கேட்டபோது, ‘ஒளி எல்லா இடத்திலும் நிறைந்துள்ளது’ என்று சொன்னார். அனைத்துமாக இருக்கும் ஒன்றில் இருந்து எந்த ஒன்றையும் ஒதுக்கிவிட முடியாது’ என்றார்.