அஞ்சலி நடித்த ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படம் நாளை திரைக்கு வருகிறது. 40 வயதாகும் அஞ்சலி, இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘என்னை நேரில் சந்திக்கும் பலர், எப்போது எனது திருமணம் என்று கேட்கின்றனர். எனது திருமணத்தை எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்வேன். அதில் மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று எனக்கு புரியவில்லை. கல்யாணம் என்பது ஒருநாள் கொண்டாட்டம் கிடையாது.
கல்யாணத்துக்கு பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கை அடியோடு மாறுகிறது. பல்வேறு விஷயங்களை அவள் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி பல்வேறு சிரமங்களும், பொறுப்புகளும் இருக்கும்போது, எதற்காக இந்த கேள்வியை கேட்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு எப்போது திருமணம் நடந்தாலும், மனதார வாழ்த்தும் நான்கு பேரோ அல்லது நாற்பது பேரோ இருந்தால் போதும். அவர்கள் மட்டும் எனது திருமண விழாவுக்கு வந்து வாழ்த்தினால் போதும். ஆடம்பரமான கூட்டம் எனக்கு தேவை இல்லை’ என்றார்.
