Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தக் லைஃப் டிரெய்லர் ரிலீஸ்: அபிராமிக்கு கமல் லிப் லாக் கிஸ்

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’ . மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாகவுள்ளது. ‘தக் லைப்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியிடப்பட்டது மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 5 மணி வெளியானது.

இதில் ஆர்ப்பரிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. கதைப்படி கமல்ஹாசனின் வளர்ப்பு மகனான சிம்பு, அவரது கேங்ஸ்டர் சாம்ராஜ்யத்தை கட்டி காக்கிறார். ஒரு கட்டத்தில் கமலுக்கும் சிம்புவுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. படத்தில் தனது மனைவியாக நடித்துள்ள அபிராமிக்கு கமல் லிப் கிஸ் தருகிறார். திரிஷா, கமல்ஹாசனின் ரகசிய காதலியாக நடித்துள்ளார். இவை அனைத்தும் இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது.