Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்றுள்ள படம், ’கருப்பு’. இதில் மலையாள நடிகை அனகா மாயா ரவி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறுகையில், ‘கடந்த 2023ல் ’காதல்: தி கோர்’ என்ற மலையாள படத்தில் நடித்தேன். மம்மூட்டி, ஜோதிகா நடித்த இதில் நான் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தேன். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீரென்று சூர்யா வந்திருந்தார். அன்று எனக்கு படப்பிடிப்பு இல்லாததால், நான் படப்பிடிப்பு தளத்துக்கு வரவில்லை.

வீட்டிலேயே இருந்தேன். அப்போது எனது உதவியாளர் போன் செய்து, இன்று வீடியோகால் ஷூட் இருப்பதாக சொன்னார். நானும் வீடியோகாலில் வந்தேன். சிறிது நேரத்தில் வீடியோகால் ஷூட் முடிந்தது. உடனே மம்மூட்டி சார், நான் இன்னும் லைனில்தான் இருக்கிறேனா என்று கேட்டபடி, ஜோதிகா மேடத்திடம் போனை கொடுத்தார். அடுத்த விநாடியில் எனக்கு முன்பு சூர்யா சார் நின்று கொண்டிருந்தார். இது என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தருணம். அவர் கொடுத்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தேன்’ என்றார்.