Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

முனீஷ் காந்த் நடிக்கும் தி டோர்ம்

சென்னை: நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் முனீஷ்காந்த், ஏற்கனவே ‘மிடில் கிளாஸ்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். இந்நிலையில், மீண்டும் அவர் கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘தி டோர்ம்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ் டரை விஜய் சேதுபதி வெளியிட்டார். தீபா ஸ்ரீதர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் சபரீஷ், அருண் கார்த்தி, சாம் ஜான், நிகில் நாயர், ஷாலினி காசித்தங்கம், வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து, ஃபெரோஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இளையராஜா முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷாம் விஷால், செபாஸ்டியன் ரொஸாரியோ இணைந்து இசை அமைத்துள்ளனர். கு.கார்த்திக் வசனம் எழுத, அனில் கிரிஷ் எடிட்டிங் செய்துள்ளார். அமர் கீர்த்தி அரங்கம் அமைக்க, குட் ஸ்டஃப் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஈ.ஆர்.டில்லி பல ராமன், ஜெகதீஸ்வரன் டில்லி இணைந்து தயாரித்துள்ளனர். லைன் புரொடக்‌ஷன் பணிகளை, கிளஸ்டர்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சுரேஷ் செல்லப்பன், அருண் கார்த்திக் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.