Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திரில்லர் கதை மறைமுகம்

சென்னை: அபிகா ஆர்ட்ஸ் சார்பில் ‘மறைமுகம்’ என்ற திரைப்படம் ஆக்‌ஷன் திரில்லர் கலந்த படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும் நிஷித்தா, தனுஜா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஏ.பி.ஷர்வின் எழுதி இயக்கியுள்ளார். ஏற்கனவே ‘துள்ளும் காலம்’ மற்றும் ‘சோக்காலி’ படங்களை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு, விஜய் திருமூலம். இசை, வசந்த். இந்த படத்தை வி. ஜீவகன், ஏ.பி. ஷர்வின் இணைந்து தயாரிக்க, இணை தயாரிப்பு, உமேரா பேகம். இந்த படத்தின் படப்பிடிப்பு நாகர்கோயில் கன்னியாகுமரி கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து முடிந்தது விரைவில் திரைக்கு வர உள்ளது