Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தொண்டையில் அறுவை சிகிச்சையால் பேச முடியாமல் போனது: சிகரெட் பழக்கம் பற்றி ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்

சென்னை: சூர்யா நடிப்பில் ‘கறுப்பு’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி. அவர் கல்லூரி விழா ஒன்றில் பேசியதாவது: கல்லூரியில் படிப்பவர்களுக்கு ஒரே விஷயம் தான் சொல்வேன். உங்கள் உடல்தான் உங்கள் கருவி. அந்த உடலை கெடுக்கும் எந்த தீய பழக்கத்தையும் வைத்துக் கொள்ளாதீர்கள். நான் கல்லூரி படிக்கும் போதுதான் சிகரெட் பிடிக்க கற்றுக் கொண்டேன்.

12வது அட்டெம்ப்ட் எக்ஸாம் எழுதும் போதிலிருந்து இந்த பழக்கம் வந்தது. அதை கைவிட 20 வருடங்கள் ஆகிவிட்டது. தொண்டையில் எனக்கு அறுவை சிகிச்சை கூட செய்தார்கள். சில நாட்கள் பேசமுடியாமல் போனது. என்னுடைய வேலையே பேசுவதுதான். திடீரென பேச்சு போன பயத்தில் சிகரெட்டை விட்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த சிறந்த முடிவு கெட்ட பழக்கங்களை விட்டது. கெட்ட பழக்கங்கள் இல்லை என்பதால் மனது மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கிறது. 12 -13 மணிநேரம் உற்சாகமாக வேலை செய்ய முடிகிறது.

நிறைய நல்ல விஷயங்களை யோசிக்க முடிகிறது. கல்லூரி காலகட்டங்களில் கெட்ட பழக்கங்களை பழகுவது எளிதானது, ஆனால் அதிலிருந்து வெளியே வருவது மிகவும் சிரமமானது. என் நண்பர் ஒருவர் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் கல்லூரி வந்தார். எங்களை பார்த்து அந்த பழக்கங்களை கையில் எடுத்தவர், அதிலிருந்து வெளியே வரமுடியாமல் போனது. இப்போது அவருக்கு விவாகரத்து கூட ஆகப்போகிறது. இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி பேசினார்.