Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் அமலா பால் படம்

சென்னை: அமலா பால் நடித்துள்ள ‘ஹாஃப்’ என்ற படம் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) திரையிட தேர்வாகியுள்ளது. திருமணத்துக்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகி இருந்த அமலா பால், தற்போது மீண்டும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்தவகையில் வாம்பயர் ஆக்‌ஷன் திரில்லர் படமான ‘ஹாஃப்’ படத்தில் நடித்துள்ளார். சம்ஜத் இயக்கியுள்ள இப்படத்தில் அப்பாஸ், ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ் உள்பட பலர் முக்கிய் வேடத்தில் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் அரபு மொழிகளிலும் வெளியாக உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘மிட்நைட் மேட்னஸ்’ (Midnight Madness) என்ற பிரிவில் ‘ஹாஃப்’ படம் திரையிட தேர்வாகியுள்ளது. திகில், ஆக்‌ஷன் மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த பிரிவில் ‘ஹாஃப்’ படம் தேர்வாகியது படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.