Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திரிஷாவின் செல்லப்பிராணியின் ரகசியம்

விஷ்ணு விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் திரிஷா மற்றும் அவர் வளர்க்கும் செல்லப்பிராணியான ‘இஸ்ஸி’ என்ற நாயை பற்றி கூறியுள்ள சுவாரஸ்ய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஷ்ணு விஷால் பேசுகையில், ‘நான் இதுவரை இந்த விஷயத்தை எந்த இடத்திலும் சொல்லியதே இல்லை. இப்போது திரிஷாவிடம் இருக்கும் ‘இஸ்ஸி’ என்ற நாய், என்னுடைய ‘டெடி’ என்ற செல்ல நாயின் மகள்தான். அது பூடில் இன நாய். எனது மனைவியும், திரிஷாவும் நெருங்கிய தோழிகள் என்பதால் அடிக்கடி நாய்கள் பற்றியே பேசிக்கொள்வார்கள்.

இதை நான் இப்போது ஷேர் செய்துவிட்டதால் திரிஷா இதற்கு கோபப்பட மாட்டார் என்று நம்புகிறேன்’ என்றார். முன்னதாக திரிஷா வளர்த்த ‘ஸோரோ’ என்ற வளர்ப்பு நாய் கடந்த 2024ம் ஆண்டு உயிரிழந்தது. அதன்பிறகு தான் விஷ்ணு விஷாலின் வளர்ப்பு நாய் ஈன்ற பெண் குட்டியை வாங்கி வளர்த்து வருகிறார். தனது செல்லப்பிராணி மீது அதிக பாசம் கொண்ட திரிஷா அதனுடன் சேர்ந்து செல்ஃபி போட்டோ எடுத்து அடிக்கடி சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் அதற்கு பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்.