Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திரிஷாவை பற்றி பேசினால் பிரச்னை: பசில் ஜோசப் தடாலடி

கொச்சி: மலையாள இயக்குனரும், நடிகருமான பசில் ஜோசப் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பசில் ஜோசப் - டொவினோ தாமஸ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘அதிரடி’. இந்தப் படம் தமிழிலும் வெளியானது. இந்நிலையில் பட புரமோஷனுக்கு தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் பசில் ஜோசப், சமீபத்தில் திரிஷா பற்றி பேசியிருக்கிறார். பசில் ஜோசப்பிடம் ‘உங்களுடைய செலிபிரிட்டி க்ரஷ் யார்?’ எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நடிகர் பசில் ஜோசப் அளித்த பதில், “அதைப் பற்றி சொன்னால் பிரச்சினையாகிவிடும்” என்றார். அதற்கு தொகுப்பாளர், ‘இல்ல பரவாயில்லை சொல்லலாம்’ என சொல்ல, சிரித்துக்கொண்டே ‘‘நடிகை திரிஷா கிட்ட ரொம்ப க்ரஷ் இருந்தது, ஆனால் இப்போது இல்லை’’ என சிரித்தபடி கூறினார். அவருடைய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.