Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தனுஷ் படத்தில் 2 ஹீரோயின்

‘போர் தொழில்’ என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். மமிதா பைஜூ, ஜெயராம், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அதனை தொடர்ந்து ‘அமரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. கடந்த சில நாட்களாக இப்படத்தில் கமிட்டாகியுள்ள நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்டது படக்குழு. அதன்படி இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைக்கிறார் என அறிவிக்கப்பட்டது.

மேலும், இளம் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா மற்றும் முன்னணி நடிகை சாய் பல்லவி ஆகிய இருவரும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே சாய் பல்லவி தனுஷுடன் இணைந்து ‘மாரி 2’ படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடலுக்கு இருவரும் நடனமாடியது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ், சாய் பல்லவி இணை ந்து நடிக்க உள்ளனர். இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவியும், ஸ்ரீலீலா முக்கிய வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.