Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இரண்டு வானம் படத்தின் வெள்ளிச்சுடரே பாடல் வெளியீடு

சென்னை: டி.ஜி.தியாகராஜன் வழங்கும் சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ள படம், ‘இரண்டு வானம்’. விஷ்ணு விஷால், மமிதா பைஜூ நடித்துள்ளனர். தினேஷ் கே.பாபு ஒளிப்பதிவு செய்ய, திபு நைனன் தாமஸ் இசை அமைத்துள்ளார். சான் லோகேஷ் எடிட்டிங் செய்துள்ளார்.  மத்ராரேஷி எழுதிய ‘வெள்ளிச்சுடரே’ என்ற பாடலை கபில் கபிலன் பாடியுள்ளார்.

இது வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. ’முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ஆகிய ஹிட் படங்களுக்கு பிறகு இயக்குனர் ராம்குமார், விஷ்ணு விஷால் இணைந்துள்ள 3வது படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் ஆடியோ, டிரைலர் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.