Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

" வதந்தி 2 " - சீரிஸ் விமர்சனம்

இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில், நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இணையத் தொடர் “வதந்தி”. இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருந்த இந்தத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

அதைத் தொடர்ந்து தற்போது " வதந்தி 2 " இணையத் தொடர் வெளியாகியிருக்கிறது. நடிகர் சசிகுமார் மூஸா ராஜா எனும் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், நடிகர்கள் அனகா, அபர்னா தாஸ், ரேவதி, விவேக் பிரசன்னா, , யஷ்வந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு லைட் போலிஷ் ஸ்டேஷன். அதாவது குறைந்த காவலர்களுடன் அதிக பணிச்சுமை இல்லாமல், பெரிதாக டிபார்ட்மெண்ட் உதவிகளும் கிடைக்காமல் இயங்கும் ஸ்டேஷன். அங்கே தண்டனை டிரான்ஸ்பாரில் வேலைக்கு இருக்கிறார் மூசா ராஜா ( சசிகுமார்) .

இதற்கிடையில் சாலை வேலைகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா . அதன் துவக்க விழாவில் கலந்துகொள்ள அமைச்சர், அரசியல் பிரமுகர்கள் என கூடியிருக்கிறார்கள். அப்போது தோண்டப்படும் மண்ணில் இருந்து வந்து விழுகிறது ஒரு மனித எலும்புக்கூடு. அதனை விசாரணை செய்யும் பொறுப்பு மூசா ராஜா குழுவிற்கு வந்து சேர முடிவு என்ன என்பது மீதிக்கதை.

சசிகுமார் தீவிரவாதியாக நடித்தாலே அவர்தான் நல்லவராக இருப்பார். இதில் காவலர் கேட்க வேண்டுமா. கரை படியாத கைகளுடன் இருக்கும் காவல் அதிகாரியாக ஸ்கோர் செய்கிறார். தொடர்ந்து அனாகா காவல் அதிகாரியாக புது அவதாரம். அலட்டாமல் எந்த பந்தாவும் இல்லாமல் எதார்த்தமாக நடித்திருக்கிறார். தொடர்ந்து கவனம் பெறுகிறார்கள் விவேக் பிரசன்னா, மற்றும் யஷ்வந்த் பாத்திரங்கள் ஊர் சாயலில் மனதில் நிறைகிறார்கள். குறிப்பாக யஷ்வந்த் ' முடக்கத்தான் மணி கேரக்டரில் அப்படியே மதுரை இளைஞராகவே தெரிகிறார்.

நல்ல கதை, நல்ல திருப்பம் ஆனால் இன்னும் திரைக்கதையில் வேகம் கொடுத்திருக்கலாம். ஏனெனில் கிட்டத்தட்ட மத்திய அரசு வழக்கு, என்கையில் இந்த மெதுவான திரைக்கதை நெருடல்தான். எனினும் சுவாரசியமான கதை அதில் அதிர்ச்சி கொடுக்கும் கிளைமாக்ஸ் என கொடுத்து, விஷுவலிலும் கிராமத்து அத்தியாயங்களை அருமையாக பதிவு செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் இசையில் கருப்பு பாடல், ஒலப்புற சீன் பாடல்கள் தமிழ்நாட்டு உட்புற உணர்வை கடத்துகிறது. சரவணன் ராமசாமி ஒளிப்பதிவில் மதுரை, திருநெல்வேலி நிலத்தை மட்டுமின்றி, அங்கே இருக்கும் மக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தையும் மிக அற்புதமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகள் வரும் போர்ஷன்களில் நிஜமாகவே மதுரை இளைஞர்களை கண்முன் காட்டியது போல் இருந்தது. ரிச்சர்ட் கெவின் எடிட்டிங்கில் இன்னும் சில காட்சிகள் நீளம் செதுக்கப்பட்டிருக்கலாம்.

மொத்தத்தில் " வதந்தி 1 " வெப் தொடர் திரைக்கதைக் களம் வேறு, இந்த " வதந்தி 2 " களம் வேறு மேலும் எதார்த்தமான மக்களுக்கும் புரிகிற பாணியில் இப்படி ஒரு கதைக் கருவை கையாண்டது புதுமை என்கிற விதத்தில் தவிர்க்க முடியாத தொடராக மாறியிருக்கிறது.