சென்னை, அக்.28: வைபவ் நடிப்பில் ஆன்மீகமும், ஆக்ஷனும் கலந்து உருவாகியுள்ள பிரமாண்டமான படம், ‘மணிகண்டா’. இது வரும் கார்த்திகை மாதம் திரைக்கு வருகிறது. தந்த்ரா பிலிம்ஸ் தயாரிக்க, விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ளார். வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரவி மோகன் வெளியிட்டார். ஜே.கே.சரவணா, எம்.ராஜாராம் இணைந்து தயாரித்துள்ளனர். மலையாளத்தில் ஹிட்டான ‘மாளிகப்புரம்’ என்ற படத்தை இயக்கியிருந்த விஷ்ணு சசி சங்கர், ‘மணிகண்டா’ படத்தை இயக்கியுள்ளார். மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ், ‘ஆடுகளம்’ நரேன், ஹரீஷ் பெராடி, அர்ஜெய் நடித்துள்ளனர். பிரேம்ஜி அமரன் இசை அமைக்க, யுவன் செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
+
