தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

வந்தே பாரத் ரயிலில் தரமற்ற உணவு: நடிகர் பார்த்திபன் புகார்

சென்னை: சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்த்திபன் தொடர்ந்து படங்களின் அப்டேட், அவ்வபோது சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து தனது கருத்தை வெளியிடுவது என பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வந்தே பாரத் ரயிலில் உணவு சரியில்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வந்தே பாரத்-தில் தந்த உணவு தரமாக இல்லை. பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முணுமுணுத்தார்கள்.

நான் கம்ப்ளைன்ட் புக்-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன்.நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென” என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் புகார் கொடுத்த கடிதத்தையும் பகிர்ந்துள்ளார். அதில், “உணவு பரிமாறியவர்கள் சிறப்பாக செய்தனர். டிரெயினும் சுத்தமாக இருந்தது. ஆனால் இரவு உணவு மற்றும் சிக்கன் மிக மோசமாக இருந்தது. உணவுக்காக பெரும் தொகையை வாங்கிக் கொண்டு இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்யம் அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.