Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வாரணாசியுடன் ஸ்பிரிட்டை ஒப்பிட்ட இயக்குனர்

பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிப்பில் வேணுகோபால் இயக்கியுள்ள ‘ரோமாஞ்சகம்’ என்ற தெலுங்கு படத்தில் சுமந்த் பிரபாஸ், அனந்திகா சனில்குமார் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான விழாவில் ‘அனிமல்’ படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா பங்கேற்றார். இதே பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஸ்பிரிட்’ என்ற பான் இந்தியா படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி வருகிறார். பிரபாஸ், திரிப்தி டிம்ரி நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 5ம் தேதி ரிலீசாகிறது.

சந்தீப் ரெட்டி வங்கா பேசுகையில், ‘எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கும் ‘வாரணாசி’ படத்துக்கும், எங்களின் ‘ஸ்பிரிட்’ படத்துக்குமான இடைவெளி 37 நாட்கள் இருக்கின்றன. அது போதுமானதுதான். ஆனால், எங்களின் படத்தைவிட ‘வாரணாசி’ படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. நாம் என்னதான் முயற்சித்தாலும் சரி, ‘ஸ்பிரிட்’ படத்துக்கு சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ்தான் கொடுக்கும். அதனால்தான் சொல்கிறேன், எங்கள் தயாரிப்பில் வரும் முதல் ‘யு/ஏ’ படமான ‘ரோமாஞ்சகம்’ படத்துக்கு குடும்பத்துடன் வாருங்கள்’ என்றார்.