Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கலையை மீட்கும் வர்ண கதைகள்

சென்னை: ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் ‘வர்ண கதைகள்’ வெப்தொடரை ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் தயாரிக்கிறார். பிரஜ்ஜன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள :இறப்பின் ரகசியம்’ படத்தை இயக்கிய இமானுவேல் இந்த வெப் தொடரை கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார்.

மாறன், சென்ராயன், ஜெயச்சந்திரன், ப்ரணா, ஆர்ஜே. புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்றும் நித்யா குயின், ரோஹிந்த், தீபா ஆகியோர் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நடிகர்களை சாராத ஒரு முக்கிய கதாபாத்திரம் இந்த வெப் தொடரில் இடம்பெறும்.

அது தமிழ் ரசிகர்களுக்கு எதிர்பாராத புதிய அனுபவமாக இருக்கும். அஷ்வின் நோயல் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கப் பணிகளை ஸ்ரீமன் மேற்கொள்கிறார். படத்தொகுப்புப் பணிகளை நந்தா மேற்கொள்கிறார். வெப் தொடர் பற்றி இயக்குனர் இமானுவேல் பேசும்போது, ‘‘கலைஞர்கள் அழிந்தாலும் கலைகள் அழிவதில்லை. ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் ஓவிய கலைகளும், ஓவிய கலைஞர்களும் அழிந்து கொண்டு தான் இருக்கின்றனர். அந்தக் கலையை அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்கான முயற்சி தான் இந்த வர்ண கதைகள்” என்றார்.