Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வீடியோ எடுத்ததால் நயன்தாரா அப்செட்: நிகழ்ச்சியில் சலசலப்பு

சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் தன்னை வீடியோ எடுத்ததால் நயன்தாரா அப்செட் ஆனார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நயன்தாரா ஐதராபாத் வந்திருந்தார். மேடைக்கு அவர் செல்லும்போது, ரசிகர்கள் நிறைய பேர் கூடிவிட்டனர். அதில் சிலர் அவரை வீடியோ எடுக்க ஆரம்பித்தனர். உடனே கையை மேலே தூக்கி, வீடியோ எடுக்காதீர்கள் என்பதுபோல் நயன்தாரா சைகை செய்தார். ஆனால் ரசிகர்கள் அதை கேட்காமல் தொடர்ந்து வீடியோ எடுத்து வந்தனர்.

இதனால் நயன்தாரா அப்செட் ஆனார். பிறகு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் இது பற்றி அவர் முறையிட்டார். உடனே அவர்கள் வீடியோ எடுத்தவர்களை தடுத்தனர். வழக்கமாக பொது இடங்களுக்கு, ஏதேனும் விழாக்களுக்கு செல்லும்போது தன்னை வீடியோ எடுப்பதை நயன்தாரா தடுக்க மாட்டார். இந்தமுறை அப்படி செய்தது புதிதாக இருந்ததாக ரசி கர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.