Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விக்னேஷ் சிவன் என்னை மறந்துவிட்டார்: சோனா பகீர்

சென்னை: கவர்ச்சி நடிகை சோனா, தற்போது தனது வாழ்க்கை கதையை வெப்சீரிஸாக இயக்கி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன், இயக்குனர் ஆவதற்கு முன்பாக சோனாவின் அலுவலகத்தில்தான் வேலை பார்த்து வந்தார். இது பற்றி சோனா கூறியதாவது: என் ஆபீசில் விக்னேஷ் சிவன் பல வேலைகளை செய்து வந்தார். அதைப் பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது. காரணம், அவர் நயன்தாராவை திருமணம் செய்துகொண்டார். நயன்தாராவும் என்னைப்போன்ற ஒரு பெண்தான். சினிமாவில் அடுத்தடுத்து பல சரிவுகளையும் அடிகளையும் தாங்கித்தான் விக்னேஷ் சிவன் முன்னேறி இருக்கிறார். நல்ல குடும்பத்தையும் அமைத்திருக்கிறார்.

அவரைப் பற்றி சொல்வதற்கு அதிகமில்லை. ஆனால் அவர் என்னை மறந்துவிட்டார். இதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. சினிமாவில் பணத்தை இழந்தால் சில நாட்கள் அழுவேன். ஆனால் நம்பியவர்கள் ஏமாற்றினால், துரோகம் செய்தால் அதை தாங்கிக் கொள்ள என்னால் முடியாது. ரொம்பவே கஷ்டப்படுவேன். எனது வெப்சீரிஸில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்த விஷயங்களும் வேறு விஷயங்களும் இருக்காது. அது புதிதாக இருக்கும். இவ்வாறு சோனா கூறினார். சோனாவின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது. ‘விக்னேஷ் சிவன் பற்றி சோனா என்னதான் சொல்ல வருகிறார்’. ‘இருவரும் காதலித்தார்களா?’ என ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.