Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

உடல் எடை கூடிய விஜய் எடை குறைத்த அஜித்: ஏன் எதற்கு?

சென்னை: விஜய் தனது உடல் எடையை திடீரென உயர்த்த, அஜித்தோ எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறியுள்ளார். விஜய் எப்போதுமே தனது உடல் எடையை அதிகரித்தது கிடையாது. ஒரே மாதிரியான தோற்றத்திலேயே எப்போதும் காணப்படுவார். தனது படங்களிலும் அதேபோல் நடிப்பார். ஆனால் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அதில் முகம் வீங்கிய நிலையில் சதையும் போட்ட நிலையில் காணப்பட்டார். அதற்கு காரணம், அவர் நடிக்க உள்ள கடைசி படம்தானாம். இந்த படத்தில் ஒரு கட்டத்தில் 55 வயது கேரக்டரில் விஜய் நடிக்கிறாராம்.

அதற்காக உடல் எடையை கூட்ட வேண்டும் என இயக்குனர் வினோத் சொன்னதும் அதன்படியே எடை கூடியுள்ளாராம் விஜய். படத்துக்காக இதுபோல் தோற்றத்தில் அவர் மாற்றம் செய்வது இதுவே முதல்முறையாகும். அதே சமயம், அஜித் தனது உடல் எடையை 12 கிலோ வரை குறைத்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறியுள்ளார். ‘குட் பேட் அக்லி’ படத்தில் 3 வேடத்தில் அஜித் நடிக்கிறார். இதில் ஒரு வேடத்துக்காக அவர் எடையை குறைத்துள்ளாராம். ஒரே சமயத்தில் அஜித், விஜய் செய்துள்ள இந்த மாற்றம் அவரது ரசிகர்களிடையே பரபரப்பு பேச்சாக மாற்றியுள்ளது. அவர்களின் புதிய தோற்றத்துடன் கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.