Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பல ஆச்சரியங்கள் நிறைந்த விஜய் சேதுபதி வாழ்க்கை

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் படம் ‘இஞ்சி வெல்லம்’. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். சமீபத்தில் கொல்கத்தாவில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருவதால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. காதலை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

சமீபத்தில் விஜய் சேதுபதி பேசும்போது, ‘மணிரத்னம் இயக்கத்தில் ஒரு காதல் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாகவும், கனவாகவும் இருந்தது. காதலை அவர் காட்சிப்படுத்தும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். காதலை அழகாகவும், ரசிக்கும்படியும் திரையில் வெளிப்படுத்துவார். ‘மகாராஜா’ படம் ஹாலிவுட்டில் விற்பனையானது, இந்தி படத்தில் நடித்தது, மணிரத்னம் படத்தில் நடித்தது என்று என் வாழ்க்கையில் இதுபோன்ற பல ஆச்சரியமான விஷயங்கள் நடந்துள்ளன. குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்று தெரிவித்துள்ளார்.