தென்னிந்திய படவுலகில் வேகமாக முன்னேறி வரும் ஹீரோயின் பிரீத்தி முகுந்தன், ‘பிளாஸ்ட்’ என்ற படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோயினாக மாறினார். சமீபத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ படம் அவருக்கு நல்ல பெயரை கொடுத்துள்ளது. தனது புதிய படம் குறித்து பிரீத்தி முகுந்தன் கூறுகையில், ‘தனுஷ் ேஜாடியாக நான் நடிக்கும் படத்தை ‘லப்பர் பந்து’ தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். முதல்முறையாக மதுரை பெண்ணாக நடித்து வருகிறேன். கிராமத்து பெண் கேரக்டர் என்பதால், நிறைய ஹோம் ஒர்க் செய்கிறேன். மதுரை மக்களின் பழக்க வழக்கங்களை நேரில் பார்த்து கற்றுக்கொள்கிறேன். எனது தோற்றத்துக்கு அதிரடி ஆக்ஷன் கேரக்டர் பொருத்தமாக இருக்கும் என்று பலர் சொல்வதை கேட்டு சந்தோஷமாக இருக்கிறது. காரணம், எப்போதுமே நடிகர், நடிகைகள் அதிரடி காட்சிகளில் நடித்தால், அதற்கு ரசிகர்கள் பெருமளவு ஆதரவு கொடுத்து ரசிப்பார்கள்.
ஹீரோயின்களும் ஆக்ஷன் காட்சியில் நடிப்பதை அனைத்து தரப்பு ரசிகர்களும் வரவேற்கின்றனர். இது எனக்கு அதிக உற்சாகத்தை அளித்துள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி போல் ஆக்ஷன் கதைகளில், அதிரடி காட்சிகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதிரடி கேரக்டரில் நடித்த பிறகு அதை திரையில் பார்த்தால், செம கெத்தாக இருக்கும். அந்த படங்களுக்கான கதையும், காட்சிகளும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். என்னை பொறுத்தவரையில் முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் இடம்பெற விரும்புகிறேன். ஆனால், நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை கிடையாது. திறமையான நடிகை என்ற நல்ல பெயர் கிடைத்தாலே போதும். ஒரு படத்தில் நடித்தாலும், அதிலுள்ள எனது கேரக்டர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்றார்.
