Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விக்ரம் பிரபுவின் 26வது படம்: ரோமியோ பிக்சர்ஸ் பிரம்மாண்ட அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பாளர் ராகுல் அவர்களின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

தங்க மார்க்கெட் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லர் படைப்பாக உருவாக உள்ளது. சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்புகளை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர் தேர்வு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் விக்ரம் பிரபு, தனது தனித்துவமான கதைத்தேர்வுகள் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். குறிப்பாக டாணாக்காரன்.