Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மீண்டும் வில்லியாக நடித்த ரெஜினா

சுந்தர்.சி இயக்கியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ என்ற பக்தி கலந்த ஃபேண்டஸி படம் நாளை மறுதினம் திரைக்கு வருகிறது. இதில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா, வில்லியாக ரெஜினா நடித்துள்ளனர். படம் குறித்து ரெஜினா கூறுகையில், ‘எனது திரைப்பயணத்திலேயே முதல்முறையாக இதுபோன்ற பிரமாண்டமான ஒரு கமர்ஷியல் படத்தில் வில்லியாக நடித்துள்ளேன். படத்தில் குறைந்தபட்சம் 3,000 சிஜி ஷாட்டுகள் இருக்கின்றன. வரலாற்று படங்கள் என்றாலே ஹெவியான மேக்கப் மற்றும் ஆடைகள் இருக்கும். மேக்கப் போட்டுக்கொள்ள அதிக நேரமாகும் என்றாலும், மனதளவில் அதை ஏற்றுக்கொண்டு செய்ய தொடங்கிவிட்டால், பிறகு அது கடினமாக தெரியாது. அதிரடி வில்லியாக நடித்ததை ஒரு புதிய அனுபவமாக பார்க்கிறேன்.

தினமும் எனது மேக்கப்பிற்கு இரண்டு மணி நேரம் செலவாகும். எனது அறிமுக காட்சிக்காக தேன் மற்றும் பிஸ்தா பச்சை நிறத்திலான பிசுபிசுப்பான திரவத்தை எனது தலை முதல் கால் வரை ஊற்றினார்கள். அதை சமாளித்து நடித்ததே ஒரு தனி அனுபவமாக இருந்தது. ‘விடாமுயற்சி’ படத்துக்கு பிறகு வில்லி கதாபாத்திரங்கள் நிறைய வருகின்றன. ஆனால், ஒரேமாதிரி கேரக்டரில் நடிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். அதற்காக மிகவும் கவனமாக, குறைந்த எண்ணிக்கையிலான படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன்’ என்றார்.