சிறிய கிராமம் ஒன்றிற்கு காவல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் ஹீரோ. கிராமத்தில் தொடர்ச்சியாக மர்மமான முறையில் சில கொலைகள் நடக்கிறது. அதை பார்த்து பதறிய மக்கள், அதிர்ச்சி அடைந்து பயத்துடன் வாழ்கின்றனர். இதை தொடர்ந்து போலீஸ் விசாரணை தீவிரமாக நடக்கும் நிலையில், ஹீரோவுடன் பணியாற்றிய ஒரு காவலரும் கொலை செய்யப்படுகிறார். கொடூரமான முறையில் கொலைகளை செய்வது யார்? அதற்கு பின்னால் மறைந்துள்ள ரகசியங்கள் என்ன என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், ‘விசாரணை கைதி’. வி.ஜி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் நா.வெங்கடேசன் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
உன்னி கிருஷ்ணன் ஹீரோவாகவும், வைஷ்ணவி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் கூல் சுரேஷ், விகடன், ரித்விகா, ஸ்ரேயா, சேகர், ஞானவேல் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கியுள்ளார். சந்திரன் சாமி ஒளிப்பதிவு செய்ய, நரேஷ் இசை அமைத்துள்ளார். அசால்ட் மதுர சண்டைப்பயிற்சி அளித்துள்ளார். அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.
