Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விஷாலுடன் எப்போது திருமணம்? தன்ஷிகா பதில்

சென்னை: சாய் தன்​ஷி​கா, முதன்மை கதா​பாத்​திரத்​தில் நடித்துள்ள படம் ‘யோகிடா’. இதில் ஷாயாஜி ஷிண்​டே, கபீர் துஹான் சிங், எஸ்​தர் மற்​றும் பலர் நடித்​துள்​ளனர். கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்​கி​யுள்​ளார். தீபக் தேவ் இசையமைத்​துள்​ளார். பூபதி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். பிப்​.6ம் தேதி இப்​படம் வெளி​யாக இருக்​கிறது. மோனிகா சினி ஃபிலிம்ஸ் சார்​பில் செந்​தில்​கு​மார் தயாரித்​துள்ள இப்​படம் பற்​றி, சாய் தன்​ஷிகா கூறும்​போது, “கபாலி படத்​தில் ரஜினி சாரின் மகளாக நடித்​தேன். அதில் என்​னுடைய பெயர் யோகி. அப்​படித்​தான் இந்த யோகி டா ஆரம்​பித்​தது. இந்த படத்​துக்காக டைட்​டிலை யோசிக்​கும் போது, ‘கபாலி’ படத்​தில் உள்​ளது போல ஹேர் ஸ்டைல், ஆக் ஷன் இந்த படத்​தில் இருந்​தது. அதனால் தான் இந்த டைட்​டில் வைத்தோம்.

கபாலி படத்​துக்​காக நிஜ​மாகவே முடியை வெட்​டினேன். இந்​தப் படத்​தில் விக் வைத்​துள்​ளேன்’’. யோகிடா பற்றி சாய் தன்ஷிகா விவரித்த பிறகு, உங்களுக்கும், விஷாலுக்கும் எப்பொழுது திருமணம் நடக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவரோ வெட்கப்பட்டு சிரித்தபடி அதையே பதிலாக தந்தார். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்து அதன் திறப்பு விழாவை நடத்தாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிற முடிவில் இருக்கிறார் விஷால். 2025ம் ஆண்டே கட்டிட திறப்பு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தள்ளிப்போயுள்ளது.