Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சோஷியல் மீடியாவிலிருந்து விஷ்ணு விஷால் விலகியது ஏன்?

சென்னை: ராம்குமார் இயக்கத்தில் ‘இரண்டு வானம்’, செல்லா அய்யாவு இயக்கத்தில் ‘கட்டா குஸ்தி 2’ ஆகிய படங்களில் நடிக்கும் விஷ்ணு விஷால், சமீபத்தில் தனது 17வது ஆண்டு திரையுலக பயணத்தை நிறைவு செய்திருந்தார். இந்நிலையில், திடீரென்று அவர் சோஷியல் மீடியாவில் இருந்து விலகியுள்ளார்.

மேலும், தனது பட அப்டேட்டுடன் திருப்பி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழில் நடித்துள்ள ‘இரண்டு வானம்’, ‘கட்டா குஸ்தி 2’ ஆகிய படங்களின் ஹேஷ்டேக்குகளை இணைத்துள்ளார். சோஷியல் மீடியாவில் பெருகி வரும் எதிர்மறை எண்ணங்களாலேயே அவர் அதிலிருந்து ஒரு பிரேக் எடுத்திருப்பதாக விஷ்ணு விஷாலுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.