Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மகளுக்காக நெகிழ்ந்த மோகன்லால்

மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், இயக்குனர் ஜூட் அண்டனி ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துடக்கம்’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். நேற்று முன்தினம் திரைக்கு வந்த இப்படத்தில் தன் மகள் அறிமுகமாகியிருப்பது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் மோகன்லால். அவரது பதிவில், ‘ஒரு தகப்பனின் மனதுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? விஸ்மயா தனது திரைப் பயணத்தை ‘துடக்கம்’ படம் மூலம் தொடங்குவதை பார்ப்பதும், அவளுக்கு நீங்கள் காட்டும் அன்பை பார்ப்பதும் நான் என்றும் போற்றி பாதுகாக்க வேண்டிய ஆசீர்வாதம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இப்படத்தில் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரின் மகன் ஆஷிஷ் ஜோ ஆண்டனி ஹீரோவாக அறிமுகமாகியுள்ளது குறித்து, ‘சிறுவயதிலிருந்தே எனக்கு நன்கு தெரிந்த, நான் நேசித்த ஆஷிஷ் ஜோ ஆண்டனி, விஸ்மயாவுடன் இணைந்து இந்த அழகிய பயணத்தை பகிர்ந்துகொள்வதை பார்க்கும்போது என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. இருவரையும் இவ்வளவு அன்போடு ஏற்று கொண்டதற்கு உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.