தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா ஜோடி, தங்களது 20-வது திருமண நாளை வெளிநாட்டில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. கடந்த செப்டம்பர் 11-ம் தேதி தங்களது இருபதாண்டு திருமண வாழ்க்கையை நிறைவு செய்துள்ள இவர்கள், மகள் மற்றும் மகன் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
சினிமா உலகில் நட்சத்திரங்களின் திருமண வாழ்க்கை குறுகிய காலமே நீடிக்கும் என்ற பொதுவான எண்ணத்தை உடைத்து, 20 ஆண்டுகளைக் வெற்றிகரமாகக் கடந்துள்ள இந்த ஜோடி, தங்களது திருமண நாளைக் குடும்பத்தினர் மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் சூழக் கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” பட நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, தனது 20-வது திருமண நாள் கொண்டாட்டம் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "எங்கள் திருமணத்தின் 20-வது ஆண்டு நிறைவையொட்டி இதுபோன்று மீண்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது ஜோதிகாவின் நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. அதை இப்போது நிறைவேற்றியுள்ளோம். இதுபோன்றதொரு அழகான தருணத்தை மீண்டும் உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை.
இத்தனை ஆண்டுகளாக எங்கள் திருமண வாழ்க்கைக்கு நீங்கள் அனைவரும் அளவற்ற அன்பையும் மரியாதையையும் அளித்து வருகிறீர்கள். அந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன்" என்றார்.
சூர்யாவின் இந்த நெகிழ்ச்சியான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இந்த நட்சத்திர ஜோடிக்குத் தொடர்ந்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
