Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

எடையை குறைக்க ஆபத்தான வழிகளை நாடுவதா? ராதிகா ஆப்தே ஆவேசம்

மும்பை: அடிக்கடி சர்ச்சையான கருத்து களை சொல்லி வைரலாகி வரும் ராதிகா ஆப்தே (39), நடிகைகளிடையே அதிகரித்து வரும் அறுவை சிகிச்சை மோகம் குறித்து ஆவேசமாக பேசியுள்ளார். அது வருமாறு: நான் திரைத்துறைக்கு வந்த புதிதில் நடந்த முதல் சந்திப்பிலேயே எனது மூக்கையும், உடலமைப்பையும் அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக்கொள்ளும்படி ஒரு பெண் வற்புறுத்தினார். முன்னணி இயக்குனரின் படத்தில் ஒப்பந்தமான போது, நான் 3 அல்லது 4 கிலோ உடல் எடை கூடியதற்காக, உடனே என்னை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

குழந்தை பிறந்த பிறகு கூட நான் பல்வேறு சவால்களை எதிர்கொண்டேனே தவிர, இதுபோன்ற ஆபத்தான வழிகளை ஒருபோதும் நாடியது இல்லை. அதில் ஆர்வமும் இல்லை. இளம் தலைமுறையினர் திரையுலகினரை தங்களின் முன்மாதிரியாக பார்த்து செயல்படுகின்றனர். இங்குள்ள நடிகைகளில் பலர், ‘உடலமைப்பை நேசியுங்கள்’ என்று மேடையில் பேசிவிட்டு, பிறகு தங்கள் உடல் எடையை குறைக்க மருந்தையும், அறுவை சிகிச்சையை யும் நாடுவதை பார்க்கும்போது அதிக கோபம் ஏற்படுகிறது.