Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பெண்களுக்கு சமந்தா திடீர் அட்வைஸ்

தனது முதல் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார், சமந்தா. தனது கர்ப்ப கால பயணத்தை உணவு பழக்கம், உடற்பயிற்சி முறைகள், கணவர் ராஜ் நிடிமோருவுடனான பேபிமூன் சுற்றுலா வரை, இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், உடற்பயிற்சிக்கூடத்தில் அதிக எடையுள்ள உபகரணங்களை வைத்து அவர் பயிற்சி செய்யும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். கர்ப்ப காலத்தில் அதிக எடையுள்ள பயிற்சிகளை தவிர்க்க வேண்டும் என்று பலர் நினைப்பதால், அவரது உடற்பயிற்சி போட்டோக்கள் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து சமந்தா கூறுகையில், ‘நான் பல வருடங்களாக உடல் எடையை காக்கும் பயிற்சிகளை செய்து வருகிறேன்.

எனது மருத்துவரின் அனுமதியை பெற்ற பிறகே கர்ப்ப காலத்திலும் அதை தொடர்கிறேன். எனது பயிற்சியாளர் கர்ப்ப கால உடற்பயிற்சிகளில் சான்றிதழ் பெற்றவர். எனது உடல்நிலை மற்றும் கர்ப்ப காலத்துக்கு ஏற்ப அனைத்து பயிற்சிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் கர்ப்ப காலமும் மாறுபட்டது என்பதால், எனது உடற்பயிற்சி முறையை மற்ற பெண்கள் அப்படியே பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.