Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

5 வருடங்களாக பாடாதது ஏன்? சுஜாதா மோகன் உருக்கம்

சென்னை: பல்வேறு மொழிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர், சுஜாதா மோகன். கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து பாடி வந்த அவர், இசை அமைப்பாளர் மோகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களின் மகள் ஸ்வேதா மோகனும் பின்னணி பாடகி யாக முன்னணியில் இருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மேடையேறிய சுஜாதா மோகன் பகிர்ந்த உருக்கமான தகவல், ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது. சுஜாதா மோகன் பேசும்போது, ‘கடந்த ஐந்து வருடங்களாக நான் எந்த மேடையிலும் பாடவில்லை. காரணம், எனக்கு தொண்டையில் ஒரு பிரச்னை இருக்கிறது. அதனால், என்னால் முன்பு போல் பாட முடியவில்லை’ என்றார்.