Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

யோகி டா விமர்சனம்...

அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நேர்மையாக பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் யோகேஸ்வரி என்கிற சாய் தன்ஷிகா, அடிக்கடி டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார். சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் பணிக்கு வரும் அவர், அந்த ஏரியாவையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கபீர் துஹான் சிங்குடன் கடுமையாக மோதுகிறார். இதன் விளைவுகளே கதை.

‘பேராண்மை’ படத்துக்கு பிறகு சாய் தன்ஷிகா, ஆக்‌ஷன் ஹீரோயினாக மாறி ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். அவரது பாடிலாங்குவேஜ், டயலாக் டெலிவரி, சண்டைக் காட்சிகள் நம்பகத்தனமாக இருக்கிறது. ஆனால், எல்லா படங்களிலும் பார்த்த அதே ரவுடி, போலீஸ் மோதல் கதை என்பதால் சோர்வு ஏற்படுகிறது. கபீர் துஹான் சிங் வழக்கமான வில்லனாக வந்து சாய் தன்ஷிகாவை துன்புறுத்துகிறார்.

ஷாயாஜி ஷிண்டே, மனோபாலா, ரேகா நாயர், பெண் போலீஸ் கமிஷனர் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். ஹீரோ, காதல் டூயட், காமெடி இல்லை. அதற்கு பதிலாக சண்டைக் காட்சிகள் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் எஸ்.கே.பூபதி, இசை அமைப்பாளர்கள் தீபக் தேவ், அஸ்வமித்ரா, ஸ்டண்ட் மாஸ்டர் கணேஷ் ஆகியோரின் பணிகள் கவனத்தை ஈர்த்துள்ளன. பெண்களை உயர்த்த எழுதி இயக்கியுள்ள கவுதம் கிருஷ்ணா, அரதப்பழசான கதையை மீண்டும் அரைத்துள்ளார். சாய் தன்ஷிகாவின் ஸ்டண்டுகளுக்காக பார்க்கலாம்.