Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

யோகி பாபுவின் 300வது படம் நவம்பர் 27ம் தேதி ரிலீஸ்

சென்னை: யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள ‘அர்ஜூனன் பேர் பத்து’ படத்தை தேவ் சினிமாஸ் தயாரித்துள்ளது. இது யோகி பாபு நடித்துள்ள 300வது படமாகும். ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ என்ற படத்தின் இயக்குனர் லெனின் பாரதியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ரா.ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். கடந்த ஜூலை 17ம் தேதி திரைக்கு வந்திருக்க வேண்டிய இப்படம், தற்போது வரும் நவம்பர் 27ம் தேதி திரைக்கு வருகிறது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த 2009 நவம்பர் 27ம் தேதி, சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் இயக்குனர் அமீர் ஹீரோவாக அறிமுகமான ‘யோகி’ என்ற படம் திரைக்கு வந்தது. இதில் யோகி பாபு அறிமுகமானார். அவரது முதல் படம் வெளியான அதே தேதியில், இப்போது அவரது 300வது படம் வெளியாகிறது.

யோகி பாபு ஜோடியாக அனாமிகா மஹி நடித்துள்ளார். மற்றும் காளி வெங்கட், அருள்தாஸ், ‘அருவி’ மதன், சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, சவுந்தர்யா, சென்ராயன், ஹலோ கந்தசாமி, பாவா லட்சுமணன், ரஞ்சன் குமார், லெனின் பாரதி நடித்துள்ளனர். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார்.