Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார் யோகி பாபு

ராக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஏ.எஸ்.ரமணபாலாஜி, பத்மாவதி காந்தி இணைந்து தயாரித்துள்ள படம், ‘சிங்காரம்’. இது வரும் 30ம் தேதி திரைக்கு வருகிறது. யோகி பாபு, வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மரியா வின்சென்ட், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ராயன், டி.எஸ்.ஆர்., தீபா சங்கர், சபீதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம்.கணேஷ்கர் நடித்துள்ளனர். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். விவேகா பாடல்கள் எழுத, லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்துள்ளார்.

குருராஜ் அரங்கம் அமைக்க, ஃபேன்டம் பிரதீப் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். கே.வி.கதிர்வேலு எழுதி இயக்கியுள்ளார். நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல், வரலாற்று பின்னணி, சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் மற்றும் உரிமைக்கான குரலை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராக உயர்வதை சொல்லும் இப்படம், சமூக விழிப்புணர்வுடன் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளையும் இணைத்து பேசுகிறது.