சென்னை: யுவர்பேக்கர்ஸ் பவுண்டேஷன் சார்பில், ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ என்ற லாப நோக்கமற்ற ஓடிடி தளத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது ‘மனிதம்’, ‘வி3’, ‘கோட்டா’, ‘மெல்லிசை’, ‘தாவுத்’, ‘ஓ பட்டர்ஃபிளை’ ஆகிய திரைப்படங்களின் டிரைலர் திரையிடப்பட்டது. ஆர்.கே.செல்வமணி, எஸ்.வி.சேகர், போஸ் வெங்கட், மைம் கோபி, தயாரிப்பாளர் மதியழகன், யூகி சேது, கூல் சுரேஷ் பேசினர். ஆதரவற்ற மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
யுவர்பேக்கர்ஸ் சிஇஓ ஜான் ஜூலியஸ், இயக்குனர் புரூனோ, தயாரிப்பாளர் ஜே.கே.சரவணன், ஜே.கே.சதீஷ், ஸ்டார் ஹோம்ஸ் செல்வகுமார் பங்கேற்றனர். ஓடிடி நிறுவனர் கிஷோர் ஆதித்யா, ஏற்கனவே ‘மனிதம்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். தற்போது மைம் கோபி ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். அவர் பேசும்போது, புதுச்சேரியில் கடலுக்குள் இருக்கும் பிளாஸ்டிக்கை கிளீன் செய்து கின்னஸ் சாதனை படைத்தோம். எங்கள் சேவையை பிரதமர் மோடி பாராட்டினார். புதிதாக தொடங்கிய ஓடிடி தளத்துக்கு கட்டணம் கிடையாது. இலவசமாக படம் பார்க்கலாம்’ என்றார்.
