சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ஸ்வீட்டி நாட்டி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. அருண் விஷுவல்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் வி.எம்.ஆர். ரமேஷ், ஆர் அருண் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஜி. ராஜசேகர் இந்த படத்தை இயக்குகிறார். பெண் ஒளிப்பதிவாளர் சி. விஜய ஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார்.
ஜெயகுமார் கலை இயக்குனராக பணிபுரிகிறார். தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்ததோடு தமிழில் தங்கமகன், டெவில், கடாவர் போன்ற படங்களில் நடித்த ஆதித் அருண்(எ)திரிகன் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ரீஜீத்தா கோஷ், இனியா, ராதா ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ரவி மரியா, பிரபல தெலுங்கு நடிகர் ஆளி, ரகு பாபு நடிக்கிறார்கள். மூன்று கோணங்களில் நடக்கும் முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக இந்த படம் உருவாகிறது.