சென்னை: பப்லு பிருத்விராஜ், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, நாகேஷ் பேரன் விஜேஷ், ஆனந்த் நாக் நடித்துள்ள கிரைம் திரில்லர் படம், ‘பிளாக் ரோஸ்’. இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஏ.எல்.விஜய், ஆர்.மாதேஷ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய லண்டன் தொழிலதிபர் எஸ்.ஜே.சரண் எழுதி இயக்கியுள்ளார். மேலும், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க பைலட் மூவி ஒன்றை உருவாக்கியுள்ளார். இது திரைப்பட விழாக்களிலும், ஓடிடியிலும் திரையிடப்படுகிறது. கிளவுட் பிக்சர்ஸ் மற்றும் விஜயலட்சுமி தயாரித்துள்ள ‘பிளாக் ரோஸ்’ படத்துக்கு விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசை அமைத்துள்ளார். தமிழ்க்குமரன் எடிட்டிங் செய்ய, மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். ஸ்டெஃபானி ஹட்சன், எஸ்.ஜே.சரண் திரைக்கதை எழுதியுள்ளனர்.
311