தமிழில் வெளியாகியுள்ள அடல்ட் கன்டென்ட் காமெடி படம் இது. மகளிர் விடுதிக்குள் வெவ்வேறு நோக்கங்களுடன் சிலர் நுழைகின்றனர். ஒருவர் கால்பாயாக, இன்னொருவர் காதலிக்கு நள்ளிரவில் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல, இன்னும் சிலர் ஒரு பெண்ணைக் கடத்த என்று நுழைகின்றனர். இதையடுத்து விடுதிக்குள் நடக்கும் கலாட்டாக்களை காமெடியுடன் சொல்லி இருக்கிறார், இயக்குனர் கேஷவ் தெபுர். முற்றிலும் புதியவர்கள் நடித்துள்ளனர்.
4 ஹீரோயின்களுக்கும் கவர்ச்சி காட்டுவதை தவிர வேறு வேலை இல்லை. ஜாலியான கதை என்பதால், யாரும் கஷ்டப்பட்டு நடிக்க மெனக்கெடவில்லை. ஜி.கே.வியின் பின்னணி இசை சுமார் ரகம். ஆர்.ரமேஷின் ஒளிப்பதிவில் தொழில்நுட்ப தரம் குறைவு. டபுள் மீனிங் வசனங்களும், ஆபாசக் காட்சிகளும் குறைவு என்பது ஆறுதல். மகளிர் விடுதி என்றாலே அங்குள்ள பெண்கள் தண்ணியும் தம்மும் அடிப்பவர்கள், காமத்துக்கு அலைபவர்கள் என்ற தவறான சித்தரிப்பை தருகிறது படம்.