ஐதராபாத்: நடிகர் பாலகிருஷ்ணாவுடன் கவர்ச்சி நடனம் ஆடியதற்காக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா ட்ரோல் செய்யப்பட்டார். பாலகிருஷ்ணா நடிப்பில் ‘டாக்கு மகராஜ்’ தெலுங்கு படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இதில் ‘டபுடி டிபுடி’ என்ற கவர்ச்சி பாடலுக்கு பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து ஊர்வசி ரவுட்டேலா நடனமாடியுள்ளார்.
64 வயதாகும் பாலகிருஷ்ணாவுடன் அவரை விட 30 வயது குறைந்த ஊர்வசி எப்படி டான்ஸ் ஆடலாம்? அதுவும் கவர்ச்சியான, முகம் சுழிக்கச் செய்யும் ஸ்டெப்களை அவர்கள் நடனத்தில் பயன்படுத்தியுள்ளனர் என ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இதையடுத்து இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஊர்வசி, ‘‘பாலைய்யா சினிமா உலகின் லெஜன்ட். அவருடன் நடித்ததே பெருமை. பாடல், நடனம் என அனைத்துமே கலை தொடர்பானது. அதனால் அதை அந்த கண்ணோட்டத்துடன்தான் பார்க்க வேண்டும்.
பாலைய்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு பலருக்கு கிடைக்காமல் போனதற்காக கூட சிலர் இப்படி வயிற்றெரிச்சல் படலாம். ஆனால் இது எல்லாமே ரசிகர்களின் ரசனைக்காகவே உருவாக்கப்படுகிறது. அதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்’’ என ட்ரோல் செய்தவர்களை கோபத்துடன் பதில் சொல்லியிருக்கிறார் ஊர்வசி ரவுட்டேலா. இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவரை பலமாக விமர்சித்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.