சென்னை: டெட்பூல் அண்ட் வால்வரின் ஹாலிவுட் படம் வரும் 26ம் தேதி ரிலீசாகும் நிலையில், மார்வெல் ஸ்டுடியோஸ் ஒரு இறுதி டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆக்ஷன் என்டர்டெயினருக்கான எதிர்பார்ப்பை டிரெய்லர் அதிகப்படுத்தியுள்ளது. பல சூப்பர் ஹீரோக்கள் இணைந்து வரும் இந்த படத்தில் திரில் நிறைந்த ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக படக்குழு கூறுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளது. படத்தில் ஸ்டன்ட் காட்சிகளுக்கு தரப்பட்டுள்ள முக்கியத்துவம் போல், விஎப்எக்ஸ் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
293