சென்னை: தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் எழுதி இயக்குகிறார். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா, குழந்தை நட்சத்திரங்கள் நிஹாரிகா, அஹானா, புதுமுகம் தர்ஷன் ஆகியோர் நடிக்கிறார்கள்.இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில் திரில்லராக சொல்கிறது ‘நிழற்குடை’. விரைவில் வெளி வர இருக்கிறது. வசனம்; ஹிமேஷ் பாலா. இசை; நரேன் பாலகுமார். ஒளிப்பதிவு; ஆர்.பி குருதேவ். கலை; விஜய் ஆனந்த். படத்தொகுப்பு; ரோலக்ஸ்.
38