கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்துள்ள முதல் தமிழ் படம் ‘எல்ஜிஎம்’. நாயகனாக ஹரிஷ் கல்யாணும், நாயகியாக இவானாவும், முக்கிய வேடங்களில் நதியா, யோகிபாபுவும் நடித்துள்ளனர். ரமேஷ் தமிழ்மணி இயக்கி, இசையமைத்து உள்ளார்.
காதல் கதையில் தாய் பாசத்தையும் பின்னணியாக கொண்டு இந்த படத்தை எடுத்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலை நடந்து வருகின்றன. சமீபத்தில் சென்னையில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் தோனி கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். இந்நிலையில் ஜூலை 28ல் படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர்.