விடாமுயற்சி’ படக்குழுவினர் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்ய நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அஜித் நடித்த துணிவு படம் வெளியாகி எட்டு மாதங்களுக்கு பிறகு தற்போது அவர் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தத், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடிப்பதாகத் தகவல் வெளியானது.
இதில் எதிர்பாராத விதமாக கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் படப்பிடிப்பு தளத்திலேயே உயிரிழந்தார். மிலனின் உயிரிழப்பு திரையுலகினரிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய பட நிறுவனத்திடம் நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் அஜித்குமார் வேண்டுகோளுக்கு இணங்க மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.