சென்னை: அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘பிரதர்’. இதில் அக்கா கேரக்டரில் பூமிகா, அவருடைய தம்பி கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் பிரியங்கா அருள் மோகன், நட்ராஜ், சரண்யா பொன்வண்ணன், சீதா, ராவ் ரமேஷ், அச்யுத் குமார் நடித்துள்ளனர்.
ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட்டின் 8வது தயாரிப்பாக படம் உருவாகியுள்ளது. கலகலப்பான குடும்பக் கதை கொண்ட இதில், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்துக்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ்.எம், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் இணைந்துள்ளனர். வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு படம் திரைக்கு வரும் என்று ஜெயம் ரவி தெரிவித்தார்.