சென்னை: சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா அருள் மோகன், காளி வெங்கட் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம், ‘டான்’. இதை எழுதி இயக்கியவர், சிபி சக்ரவர்த்தி. தற்போது அவருக்கும், சாஃப்ட்வேர் இன்ஜினியர் வர்ஷினிக்கும் இருவீட்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஈரோட்டில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, தர்ஷன், முனீஷ்காந்த், ராஜூ, பாலசரவணன், காளி வெங்கட், ஆர்ஜே விஜய், இயக்குனர்கள் அட்லீ, ஆர்.ரவிக்குமார், பாக்யராஜ் கண்ணன், விக்னேஷ் ராஜா, விஷால் வெங்கட், பாடலாசிரியர் விவேக், தயாரிப்பாளர் சுதன், லைகா புரொடக்ஷன்ஸ் ஜி.கே.எம்.தமிழ்குமரன், எஸ்.கே புரொடக்ஷன்ஸ் கலை, சாந்தி டாக்கீஸ் அருண், நடிகை சிவாங்கி நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சிபி சக்ரவர்த்தி அடுத்து இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்.