ஐதராபாத்: ரவி தேஜா நடிக்கும் ‘மிஸ்டர் பச்சன்’ படத்தில் பாக்ய போர்ஸ் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்திருக்கிறார் பாக்ய. இப்படம் வரும் 15ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பாக்ய போர்ஸ் தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார். வட நாட்டை சேர்ந்த பாக்ய, தெலுங்கு மொழியை முறைப்படி கற்றுக்கொண்டு, முதல் படத்திலேயே டப்பிங் பேசுவது மற்ற நடிகைகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா, சமந்தா, ராஷ்மிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகளே தெலுங்கு மொழி சரியாக தெரியாமல் திணறுகிறார்கள். அவர்கள் கூட பல படங்களில் நடித்தும் டப்பிங் பேசியது கிடையாது. ஆனால் பாக்ய முதல் படத்திலேயே டப்பிங் பேசியதால் நெட்டிசன்கள் பலரும் அவரது ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டி வருகிறார்கள்.‘என்னைப் பொருத்தவரை எந்த மொழி படத்தில் நடித்தாலும் அந்த மொழியை கற்றுவிட்டு, நானே டப்பிங் பேசுவேன். எனது குரலும் நன்றாக இருப்பதாக பலரும் சொல்வதால் நானேதான் டப்பிங் பேசுவேன் என இயக்குனர்களிடம் கறாராக சொல்லிவிடுகிறேன்’ என்றார் பாக்ய.