ஜீ ஸ்டூடியோ மற்றும் வேஃபர் ஃபிலிம்ஸ் இணைந்து வழங்கும், “கிங் ஆஃப் கோதா” திரைப்பட கதாப்பாத்திரங்களின் அறிமுக வீடியோ வெளியானது. துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கோதா” திரைப்படத்தின் அதிரடியான கதாப்பாத்திரங்களின் அறிமுக வீடியோ வெளியானது. ஜீ ஸ்டூடியோ மற்றும் வேஃபர் ஃபிலிம்ஸ் இணைந்து வழங்கும் ‘கிங் ஆஃப் கோதா’, ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களை ஈர்க்கும் வகையில், மாஸான ஒரு கமர்ஷியல் படத்திற்குரிய அனைத்து அம்சங்களையும் இப்படம் கொண்டுள்ளது. படத்தின் ஒவ்வொரு தகவலுக்காகவும், ரசிகர்கள் ஏங்கி வரும் வேளையில், இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த அதிரடியான அறிமுக வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வீடியோ, படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களை சுவாரஸ்யமான ஸ்கெட்ச் வடிவில் அறிமுகப்படுத்துகிறது. அதிலும் துல்கர் சல்மானை ‘ராஜாவாக’ சித்தரித்திருப்பது, ரசிகர்களிடம் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கும் வகையில், அசத்தலாக அமைந்துள்ளது. இப்படத்தில் துல்கர் சல்மான் உடன், டான்சிங் ரோஸ் சபிர், பிரசன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன், சாந்தி கிருஷ்ணா, வட சென்னை சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
துல்கர் சல்மானுக்கு உள்ள மிகப்பெரும் வரவேற்பையும், ஓணம் பண்டிகையின் விடுமுறை காலத்தையும், பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இப்படத்தை வரும் ஓணம் பண்டிகைக்கு வெளியிட ஜீ ஸ்டூடியோ மற்றும் வேஃபர் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இப்படத்தை இயக்கியுள்ளார், ஷான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். எதிர்பார்ப்புமிக்க இப்படத்தின் அதிரடியான டீசரை, ஜூன் 28 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். தனித்துவமான கதையுடன், மிரட்டலான உருவாக்கத்தில், ரசிகர்களை மகிழ்விக்கும் புதுமையான படைப்பாக மிகப்பெரும் பொருட்செலவில், ஜீ ஸ்டூடியோ மற்றும் வேஃபர் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.