Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரசிகர்களை எச்சரித்த மீனாட்சி சவுத்ரி

தமிழில் ‘கொலை’, ‘சிங்கப்பூர் சலூன்’, ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள மீனாட்சி சவுத்ரி, தெலுங்கில் வெற்றிபெற்ற ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்துக்கு பிறகு பான் இந்தியா நடிகையாக மாறியுள்ளார். தற்போது நாக சைதன்யாவுடன் ‘விருஷகர்மா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் அவர், சில இந்தி படங்களிலும் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில், தனது பெயரில் போலியான செல்பேசி எண் உருவாக்கப்பட்டு மோசடி நடந்து வருவதாக ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். எனவே, ரசிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த எண்ணில் இருந்து உங்களுக்கு ஏதாவது குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ வந்தால், தயவுசெய்து அதுகுறித்து தெரிவிக்கவும். அது நான் இல்லை’ என்று பதிவிட்டுள்ளார்.