ஐதராபாத்: ‘கேம் சேஞ்சர்’ பாடல்கள் ஹிட் ஆகாததற்கு டான்ஸ் மாஸ்டர், நடிகரைத்தான் குறை சொல்ல வேண்டும் என தமன் சொன்னதால், அவரை சோஷியல் மீடியாவில் பின்தொடர்வதை ராம் சரண் நிறுத்திவிட்டார். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியரா அத்வானி நடித்த பான் இந்தியா படம் ‘கேம் சேஞ்சர்’. கடந்த ஜனவரியில் திரைக்கு வந்தது. இந்த படத்துக்கு தமன் இசையமைத்தார். படத்தைப் போல பாடல்களும் ஹிட் ஆகவில்லை. பாடல்கள் வைரல் ஆகாததற்கு, படத்தில் இடம்பெற்ற டான்ஸ் சரியில்லை என்றும் அதை டான்ஸ் மாஸ்டரும் படத்தின் நாயகனும் (ராம்சரண்) கவனிக்காமல் விட்டதே காரணம் என்றும் தமன் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து தமனை ராம் சரண் ரசிகர்கள் டிவிட்டரில் வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். அவரை கண்டபடி வசைபாடினர். இந்நிலையில், சோஷியல் மீடியாவில் தமனை அன்ஃபோலோ செய்திருக்கிறார் ராம் சரண். இது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி ராம் சரண் தனது படங்களில் தமனை இசையமைக்க அழைக்க மாட்டார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
117